என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தஞ்சை விபத்து"
திருவையாறு அடுத்த கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் கஸ்தூரிபாய் நகரிலிருந்து விளாங்குடி சென்றுகொண்டிருந்தார். அப்போது விளாங்குடியிலிருந்து திருவையாறு நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த லாரி சோப்பு கம்பெனி அருகே மெயின்ரோட்டில் வரும்போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து ராதா கிருஷ்ணன் மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கீழப்பழுவூரை சேர்ந்த முத்தமிழ்செல்வன்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருச்சியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி திருத்துறைப்பூண்டி நோக்கி புறப்பட்டது. அந்த மினி லாரி இன்று அதிகாலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மினிலாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் சென்று மினிலாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
தஞ்சை - வல்லம் சாலையில் உள்ள ஜெயலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 63). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர்.
இந்த நிலையில் இன்று காலை நடராஜன், வீட்டில் இருந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். பின்னர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வீட்டுக்கு அவர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு கார், திடீரென நடராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
விபத்தில் பலியான நடராஜனுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி (வயது 56).
இவர் தனது உறவினர்களான புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த கருப்பையன் (55), மாரிமுத்து (65) ஆகியோருடன் நேற்று மாலை தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 பேரும் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அந்த சமயத்தில் தஞ்சையில் இருந்து பாபநாசம் உடையார் கோவிலுக்கு ஒரு கார் தாறுமாறாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கவுரி, கருப்பையா, மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் கவுரி, கருப்பையா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மாரிமுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கவுரி, கருப்பையா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் , பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (48) என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை அருகே உள்ள நா.வல்லுண்டாம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் .
தஞ்சை அருகே கொல்லான்கரை-வடக்குப்பட்டு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சூர்யா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை-நாகை சாலை, பீட்டர் ஞானப்பிரகாசம் நகரில் வசித்து வந்தவர் ராமன் (வயது 66). இவர் இந்தியன் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் செந்தில்குமார். திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று, ராமன் தன்னுடைய சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் சென்றிருந்தார்.
நேற்று இரவு அவர் ஒரத்தநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை- மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் அருகே வந்தபோது, அந்தவழியாக வேளாங்கண்ணியில் இருந்து வந்த கர்நாடகா சுற்றுலா பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ராமனின் தலையில் பஸ்சின் முன்சக்கரம் ஏறிஇறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ராமன் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 70). விவசாயி.
இவர் கடந்த 25-ந்தேதி வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கபிஸ்தலம் கடை தெருவிற்கு சென்றார்.
அப்போது இவரது பின்னால் வந்த கார் ஒன்று ராஜகோபாலன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜகோபாலனை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை அருகே உள்ள விளார் ரோடு, காயித்தே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (வயது 38). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பணியை முடித்து விட்டு மாலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கீதா ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
இவர் தஞ்சை மாதாக்கோட்டை அருகே உள்ள பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கீதா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட கீதா பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மனைவி விபத்தில் பலியான தகவல் கிடைத்ததும் ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் டி.எஸ்.பிகள் ரவிச்சந்திரன், ஜெயசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பிரபாகரனுக்கு ஆறுதல் கூறினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த கரந்தை கொடிக்காலூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). இவர் போல்வெல் போடும் வாகன டிரைவராக உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் பத்துக்கட்டு என்ற பகுதியில் ஒரு வீட்டில் போர் வெல் போடுவதற்காக வாகனத்தை ஓட்டி சென்றார்.
அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மூர்த்தி அம்பாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சதிஷ்குமார் (வயது 26). கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது முன்னால் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சதிஷ்குமார் முன்னாள் சென்ற சைக்கிளை பார்த்தவுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மணத்திடல் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 73). கூலி தொழிலாளி.
இவர் நேற்று மணத்திடல் பாலத்தில் இருந்து வளப்பக்குடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சேவியர் மீது மோதியது. இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து நடுக்காவிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). ஐஸ் வியாபாரி.
இந்நிலையில் நேற்று குணசேகரன் கந்தர்வகோட்டையில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர் பட்டி கடை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்